அரகண்டநல்லூர் பேரூராட்சி 7 வது வார்டில் அ தி மு க வேட்பாளர் திடீரென மனுவை வாபஸ் பெற்றார் தி மு க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
அரகண்டநல்லூர் பேரூராட்சி 7 வது வார்டில் அ தி மு க வேட்பாளர் திடீரென மனுவை வாபஸ் பெற்றார் தி மு க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
திருக்கோவிலூர்
அரகண்டநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 7-வது வார்டில் தி.மு.க. சார்பில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, அ.தி.மு.க. சார்பில் ரவணன் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி முருகன் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது.
அப்போது 7-வது வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் திடீரென அங்கு வந்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தான் போட்டியில் இருந்து விலகுவதாக வாபஸ் கடிதம் கொடுத்தார். அவரது கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து 7-வது வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த தி.மு.க. வேட்பாளர் அன்பு போட்டியின்றி தேர்வு செய்வது உறுதியாகிவிட்டது. தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வாபஸ் பெற்ற சம்பவம் அரகண்டநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.