சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

நன்னிலம் பகுதியில் சாராயம் விற்ற பெண்உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-05 17:41 GMT
நன்னிலம்:
நன்னிலம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், பூந்தோட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கஸ்தூரி (வயது 48) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல தங்களது வீடுகளின் பின்புறம் சாராயம் விற்பனை செய்த நாரணமங்கலம் மில் தெருவை சேர்ந்த பாலையன் (48), வலங்கைமான் ராமர் கோவில் தெருவை சேர்ந்த ராஜன் (41) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்