பிரேக் பிடிக்காமல் வீட்டின் மீது மோதிய லாரி

திருப்பத்தூரில் பிரேக் பிடிக்காமல் வீட்டின் மீது மோதிய லாரி

Update: 2022-02-05 17:23 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் சகாயநகர் பகுதியில் வசிப்பவர் அருள் (வயது 54). இவர், பாய்ச்சல் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். அவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றுவிட்டார். 

அப்பகுதியில் திடீரென பலத்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, ஒரு லாரி அருள் வீட்டின் இரும்புக்கேட் மீது மோதியபடி நின்று கொண்டு இருந்தது. அதில் வீட்டில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் சேதம் அடைந்தது. 

சம்பவத்தை கேள்விப்பட்ட அருள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். திருப்பத்தூர் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்தனர். 

ஆம்பூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான லாரியில், திருப்பத்தூர் நகராட்சி சார்பாக சகாய நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக எம் சாண்ட் மணல், ஜல்லிக்கற்களை ஏற்றி வந்தது.

 பிரேக் பிடிக்காமல் அப்பகுதியில் உள்ள அருள் வீட்டின் முன்பகுதி மற்றும் இரும்புக்கேட் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியது ெதரிய வந்தது.

விபத்தில் யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்து கட்டிடத்தை சீரமைத்துக் கொடுக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் கட்டிடத்துக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்ததன் பேரில் லாரியை அங்கிருந்து விடுவித்தனர்.

மேலும் செய்திகள்