பாலக்கோடு அருகே விபத்தில் பூ வியாபாரி சாவு
பாலக்கோடு அருகே விபத்தில் பூ வியாபாரி இறந்தார்.
பாலக்கோடு:
தர்மபுரி நெல்லி நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது57). பூ வியாபாரியான இவர் தர்மபுரி பஸ் நிலையத்தில் பூக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு தனது தாயாரை பார்க்க மோட்டார் சைக்கிளில் தர்மபுரியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கர்த்தான்குளம் அருகே வந்த போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.