நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் விதிமுறைகளை அலுவலர்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.

Update: 2022-02-05 17:11 GMT
தர்மபுரி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் விதிமுறைகளை அலுவலர்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட மொத்தம் 1,094 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தர்மபுரி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளுக்கு 215 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் 10 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 159 வார்டுகளுக்கு போட்டியிட 879 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
விதிமுறைகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் விதிமுறைகளை  முறையாக பின்பற்ற வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) மாரிமுத்து ராஜ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்