நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கிருஷ்ணகிரிமாவட்டத்தில் 50 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 50 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Update: 2022-02-05 17:10 GMT
கிருஷ்ணகிரி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 50 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
உள்ளாட்சி தேர்தல் 
ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை ஆகிய 6 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 171 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினத்துடன் வேட்பு மனுக்கள் தாக்கல் நிறைவடைந்தது. இதில் 1,181 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. அதில் ஓசூர் மாநகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 379 மனுக்களில் 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 359 மனுக்கள் ஏற்கப்பட்டன. கிருஷ்ணகிரி நகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 264 மனுக்களில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 259 மனுக்கள் ஏற்கப்பட்டன.
பர்கூர், தேன்கனிக்கோட்டை
பர்கூர் பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 95 மனுக்களில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 89 மனுக்கள் ஏற்கப்பட்டன. தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 104 மனுக்களில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 99 மனுக்கள் ஏற்கப்பட்டன. காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 95 மனுக்களில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 87 மனுக்கள் ஏற்கப்பட்டன. கெலமங்கலம் பேரூராட்சியில் தாக்கல் செய்த 78 மனுக்களில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 75 மனுக்கள் ஏற்கப்பட்டன.
நாகோஜனஅள்ளி,ஊத்தங்கரை 
நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் தாக்கல் செய்த 74 மனுக்களில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 71 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஊத்தங்கரை பேரூராட்சியில் தாக்கல் செய்த 92 மனுக்களும் ஏற்கப்பட்டன. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாக்கல் செய்திருந்த 1,181 மனுக்களில் 50 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 1,131 மனுக்கள் ஏற்கப்பட்டன.
நாளை (திங்கட்கிழமை) வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

மேலும் செய்திகள்