கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-02-05 17:08 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் அம்பேத்கர்-பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசு மருத்துவமனை எதிரில் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பிய, தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் வீரப்பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பீமாராவ், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், ஜெய்பீம் தொழிற்சங்கத் தலைவர் செண்பகராஜ், நிர்வாகிகள் குமார், சங்கரன், பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்