சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
வேதாரண்யம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தை இடித்த போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தை இடித்த போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சுவர் இடிந்து விழுந்து சாவு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ்(வயது 50). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கோடியக்காட்டில் ஊராட்சிக்கு சொந்தமான பழைய குடியிருப்பு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து காளிதாஸ் மீது விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காளிதாஸ் உடலை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக கோடியக்காடு கிராம நிர்வாக அலுவலர் உத்திராபதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.