அண்ணாமலைஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
அண்ணாமலைஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
வீரபாண்டி:
திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் உள்ள உண்ணாமுலை அம்பிகை உடனமர் அண்ணாமலைஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது.
அண்ணாமலை ஈஸ்வரர் கோவில்
திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்பிகை உடனமர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவில் 2ஆயிரத்து 500 ஆண்டுகாலம் மிகவும் பழமை வாய்ந்த சக்தி வாய்ந்த கோவிலாக திகழ்ந்து வருகிறது.
இக்கோவில் நொய்யல் நதி பாயும் கொங்கு வளநாட்டில் பூரண காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் வென்று பசுமாடுகளை பெற்று விராடபுரம் திரும்பிச் செல்லும் போது இரவு தங்கி வழிபட்ட இடமாக அண்ணாமலை ஈஸ்வரர் கோவில் திகழ்ந்து வருகிறது. இந்த கோவில் மகா கும்பாபிஷேக விழாநடக்கிறது.
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் பேரூர் ஆதீனம் கயிலை மாமுனிவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை சிரவை ஆதீனம் கவுமார மடாலயம் சீர்வளர்சீர் குமரகுருபர சுவாமிகள், ரத்தினகிரி பால முருகன் அடிமை சுவாமிகள், வேலூர் கலவை சச்சிதானந்த சாமி, கல்யாணபுரி ஆதீனம் 57-வது குருமகாசந்நிதானம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இன்று காலை 7 மணி அளவில் மங்கல இசையுடன் புதிய ராஜகோபுரம் மற்றும்கருவறை விமானங்கள் சமகால நன்னீராட்டு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்கார அபிஷேக வழிபாடு, தீபாராதனை நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், தொழில்துறையினர், கட்சி பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் ஆன்மிகப் பெருமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு திருப்பணிக் குழுவினர். விழா கமிட்டியினர். இளைஞர் அணியினர். கோவில் அர்ச்சகர்கள், ஊர் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.