திருப்பூர்:
திராவிடர் கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காந்தி நினைவு நாளில் கோட்சே பெயரை குறிப்பிடக் கூடாது என்று கோவை காவல்துறையினர் தடை செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் யாழ் ஆறுச்சாமி, மாநகர தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் அங்ககுமார், சன் முத்துக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் அகிலன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ரமேஷ்பாபு, கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.