ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயிலில் கடத்துவதற்காக பிளாட்பாரத்தில் சிறு, சிறு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜனிடம் ஒப்படைத்தனர்.
ரெயில் மூலம் வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசியை கடத்தும் மர்ம நபர்கள் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.