கஞ்சா விற்ற வாலிபர் கைது
வேடசந்தூரில், கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
வேடசந்தூர்:
வேடசந்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் தீபக்குமார் (வயது 22). இவர், தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக்குமாரை கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து தீபக்குமார் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.