கோத்தகிரி
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது. தவிட்டுமேடு பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்தது.
தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த விமல்(வயது 21) லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பின்னர் மற்றொரு வாகனத்தில் கறிக்கோழிகள் மாற்றப்பட்டு, பொக்லைன் எந்திரம் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.