தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கழுகுமலையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள வெள்ளப்பனேரி கிழக்குத் தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ராமர் (வயது 35). கூலி தொழிலாளியான இவர், சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் அவருடைய மனைவி இசக்கியம்மாள் தனது மகன் மற்றும் மகள்களுடன் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் ராமர் நேற்று முன்தினம் மனைவியை பார்க்க செல்வதாக கூறி வெளியே சென்றார். இதற்கிடையே நேற்று காலை கழுகுமலை- கோவில்பட்டி ரோடு மாட்டுத்தாவணி பகுதியில் ராமா் விஷம் குடித்து பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் கழுகுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ராணி விசாரணை நடத்தி வருகிறார்.