சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி மகனின் பிறந்தநாளுக்கு கேக் வாங்க சென்றபோது பரிதாபம்

Update: 2022-02-05 04:41 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அடுத்த காளசமுத்திரம் புது காலனியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் வீரமுத்து(வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகன் ஆகாஷ்(13) என்பவரின் பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் சின்னசேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

கூகையூர்- சின்னசேலம் சாலை தோட்டப்பாடி தனியார் விதைப்பண்ணை அருகே வந்தபோது எதிரே திருச்சி, ஸ்ரீரங்கம் அயிலாபேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் தினேஷ் குமார்(31) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் வீரமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்