புகார் பெட்டி

புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு

Update: 2022-02-04 21:53 GMT
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியில் இரும்பிலான மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்பகுதியில் துருபிடித்து ஓட்டைகள் விழுந்துள்ளன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்தப் பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், கும்பகோணம்.

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
தஞ்சை மாவட்டம் கடகடப்பை வழியாக மாரியம்மன் கோவில் பகுதிக்கு மேலசித்தர் காடு, கீழ சித்தர்காடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பொது மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் அதிக அளவில் இருசக்கர மற்றும் சைக்கிளில் சென்று வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடத்தில் உள்ள சாலைகளின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் மேற்கண்ட பகுதியில் மதுபிரியர்கள் அதிக அளவில் சாலையோரம் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட வழித்தடத்தில் சாலைகளின் இருபுறமும் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
கடகடப்பை பொதுமக்கள்

மேலும் செய்திகள்