ரூ.2½ லட்சம் பட்டுசேலைகள் பறிமுதல்

கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2½ லட்சம் மதிப்பிலான 86 பட்டு சேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-04 21:44 GMT
திருப்பனந்தாள்;
கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2½ லட்சம் மதிப்பிலான 86 பட்டு சேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.   இந்நிலையில் திருப்பனந்தாள் பகுதியில் பறக்கும்படை அலுவலர் ராஜதுரை தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். 
86 பட்டு சேலைகள்
சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் உட்கோட்டை பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவர் 86 பட்டு சேலைகளை காரில் எடுத்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் 86 பட்டு சேலைகளை பறிமுதல் செய்து திருவிடைமருதூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் என கூறப்படுகிறது.  இந்த பட்டுசேலைகள் கோட்டாட்சியர் உத்தரவுப்படி கருவூலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்