குடிநீ்ர் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
சேதுபாவாசத்திரம் அருகே பெத்தனாட்சிவயலில் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
சேதுபாவாசத்திரம்;
சேதுபாவாசத்திரம் அருகே பெத்தனாட்சிவயலில் குடிநீ்ர் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
குடிநீர் பணிகள்
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி பெத்தனாட்சிவயல் கிராமத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும், குடிநீர் திட்டப்பணிகள் குறித்து தஞ்சை மாவட்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார். பெத்தனாட்சிவயல் பகுதியில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு, மோட்டார் வசதியுடன், நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படுகிறது. இதை ஆய்வு செய்த கலெடர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடர்ந்து பள்ளத்தூர், 2-ம் புலிக்காடு ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அரசு அலுவலர் பயிற்சி மையம்
தொடர்ந்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, பயிற்சி கலெக்டர் கவுசிக், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் ஆகியோர் மனோராவில், அரசு அலுவலர் பயிற்சி மையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது பேராவூரணி தாசில்தார் த.சுகுமார், மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுதலைவர் மு.கி.முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், ஊமத்தநாடு ஊராட்சி தலைவர் குலாம்கனி, ஒன்றியக்குழு உறுப்பினர் கருப்பையன், மண்டல துணை தாசில்தார் முருகேசன், ஆகியோர் இருந்தனர்.
----
சேதுபாவாசத்திரம் அருகே பெத்தனாட்சிவயலில் நடைபெற்று வரும் குடிநீர் பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.