ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு

ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-02-04 20:19 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். 
தேர்தல் பார்வையாளர்
ஈரோடு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க, மாநில தேர்தல் ஆணையத்தால் ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளராக நிஷாந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து இவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க விரும்புவோர், தேர்தல் பார்வையாளரின் 88076 00787 என்ற செல்போன் எண்ணுக்கு தெரிவிக்கலாம்.
மேலும் இலவச தொலைபேசி எண்களாக, மாநகராட்சிக்கு 1800 42594890, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு 1800 4250424 என்ற எண்ணுக்கும் தெரிவிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
ஆய்வு
இதையடுத்து ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் நிஷாந்த் கிருஷ்ணா ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமாரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அங்கு உள்ள கேபிள் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பார்வையிட்டார். எத்தனை பேர் பணியில் ஈடுபடுகின்றனர், இதுவரை எத்தனை போன் கால் வந்துள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் மனுத்தாக்கல் செய்யும் இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரிடம் மனு தாக்கல் செய்யப்பட்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். சுயேச்சையாக எத்தனை பேர் மனுத்தாக்கல் செய்தனர். அரசியல் கட்சியினர் இதுவரை எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறித்த விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டார். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கிறார்களா? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஈரோடு சி.எஸ்.ஐ. பள்ளிக்கூடம், ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்