361 பேர் வேட்பு மனு

பெரம்பலூர் மாவட்டத்தில் 361 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2022-02-04 20:08 GMT
பெரம்பலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மட்டும் பெரம்பலூர் நகராட்சியில் ஒரே நாளில் 85 பேரும், பேரூராட்சிகளான குரும்பலூரில் 27 பேரும், அரும்பாவூரில் 35 பேரும், பூலாம்பாடியில் 15 பேரும், லெப்பைக்குடிகாட்டில் 44 பேரும் என மொத்தம் 206 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 28-ந்தேதி முதல் நேற்று வரை பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 126 பேரும், பேரூராட்சிகளில் குரும்பலூரில் 15 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 54 பேரும், அரும்பாவூரில் 15 வார்டுகளில் போட்டியிட 48 பேரும், பூலாம்பாடியில் 36 பேரும், லெப்பைக்குடிகாட்டில் 15 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 97 பேரும் என 81 வார்டுகளுக்கு மொத்தம் 361 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்