நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 699 பதவிகளுக்கு 4,414 பேர் வேட்பு மனு தாக்கல் மனுக்கள் இன்று பரிசீலனை
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. 699 பதவிகளுக்கு 4 ஆயிரத்து 414 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
சேலம்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த 28-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடங்களில் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் குவிந்தனர். மாலை 5 மணியுடன் வேட்பு தாக்கல் முடிவடைந்தது.
சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள 699 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
மாநகராட்சி, நகராட்சி
சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 783 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நகராட்சியை பொறுத்தவரை ஆத்தூரில் உள்ள 33 வார்டுகளுக்கு மொத்தம் 193 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதே போன்று மேட்டூரில் உள்ள 30 வார்டுகளுக்கு 209 பேர், எடப்பாடியில் உள்ள 30 வார்டுகளுக்கு 160 பேர், நரசிங்கபுரத்தில் உள்ள 18 வார்டுகளுக்கு 98 பேர், இடங்கணசாலையில் உள்ள 27 வார்டுகளுக்கு 134 பேர், தாரமங்கலத்தில் உள்ள 27 வார்டுகளுக்கு 177 பேர் என மொத்தம் 6 நகராட்சிகளில் உள்ள 165 வார்டுகளுக்கு 971 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
பேரூராட்சிகள்
அதே போன்று பேரூராட்சிகளை பொறுத்தவரை அரசிராமணியில் உள்ள 15 வார்டுகளுக்கு மொத்தம் 61 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். ஆட்டையாம்பட்டியில் உள்ள 15 வார்டுகளுக்கு 89 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள 15 வார்டுகளுக்கு 86 பேர், பேளூரில் உள்ள 15 வார்டுகளுக்கு 77 பேர், ஏத்தாப்பூரில் உள்ள 15 வார்டுகளுக்கு 99 பேர், கெங்கவல்லியில் உள்ள 15 வார்டுகளுக்கு 88 பேர், இளம்பிள்ளையில் உள்ள 15 வார்டுகளுககு 75 பேர், ஜலகண்டாபுரத்தில் உள்ள 15 வார்டுகளுக்கு 76 பேர், காடையாம்பட்டியில் உள்ள 15 வார்டுகளுக்கு 95 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
கன்னங்குறிச்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு 87 பேர், கருப்பூரில் உள்ள 15 வார்டுகளுக்கு 92 பேர், கீரிப்பட்டியில் உள்ள 15 வார்டுகளுக்கு 76 பேர், கொளத்தூரில் உள்ள 15 வார்டுகளுக்கு 92 பேர், கொங்கணாபுரத்தில் உள்ள 15 வார்டுகளுக்கு 94 பேர், மல்லூரில் உள்ள 15 வார்டுகளுக்கு 82 பேர், மேச்சேரியில் உள்ள 18 வார்டுகளுக்கு 131 பேர், நங்கவள்ளியில் உள்ள 15 வார்டுகளுக்கு 77 பேர், ஓமலூரில் உள்ள 15 வார்டுகளுக்கு 73 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வாழப்பாடி, தம்மம்பட்டி
பனமரத்துப்பட்டியில் உள்ள 15 வார்டுகளுக்கு 85 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள 15 வார்டுகளுக்கு 122 பேர், பி.என்.பட்டியில் உள்ள 18 வார்டுகளுக்கு 95 பேர், பூலாம்பட்டியில் உள்ள 15 வார்டுகளுக்கு 67 பேர், சங்ககிரியில் உள்ள 18 வார்டுகளுக்கு 101 பேர், செந்தாரப்பட்டியில் உள்ள 15 வார்டுகளுக்கு 84 பேர், தம்மம்பட்டியில் உள்ள 18 வார்டுகளுக்கு 102 பேர், தெடாவூரில் உள்ள 15 வார்டுகளுக்கு 53 பேர், தேவூரில் உள்ள 15 வார்டுகளுக்கு 63 பேர், வனவாசியில் உள்ள 12 வார்டுகளுக்கு 51 பேர், வாழப்பாடியில் உள்ள 15 வார்டுகளுக்கு 91 பேர், வீரகனூரில் உள்ள 15 வார்டுகளுக்கு 86 பேர், வீரக்கல்புதூரில் உள்ள 15 வார்டுகளுக்கு 110 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். மொத்தம் உள்ள 31 பேரூராட்சிகளில் 474 வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 660 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
அதன்படி மாவட்டத்தில் உள்ள 699 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 4 ஆயிரத்து 414 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.