தொழிலாளி தற்கொலை
ராஜபாளையத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
ராஜபாளையம்,
ராஜபாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனவேதனை அடைந்த முருகேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.