நவீன வசதியுடன் 8 புதிய ரோந்து வாகனங்கள்
நெல்லை மாநகர போலீஸ் நிலையங்களுக்கு நவீன வசதியுடன் 8 புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் நிலையங்களுக்கு நவீன வசதியுடன் 8 புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன.
8 போலீஸ் நிலையங்கள்
நெல்லை மாநகர போலீசில் போலீஸ் கமிஷனராக துரைகுமார் உள்ளார். மேற்கு மண்டல துணை கமிஷனராக கே.சுரேஷ்குமார், கிழக்கு மண்டல துணை கமிஷனராக டி.பி.சுரேஷ்குமார் ஆகியோர் உள்ளனர். இதுதவிர பாளையங்கோட்டை, நெல்லை பகுதிக்கு உதவி கமிஷனர்கள் உள்ளனர்.
நெல்லை சந்திப்பு, டவுன், தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, பெருமாள்புரம், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பேட்டை என 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
புதிய ரோந்து வாகனங்கள்
இந்த மாநகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ரோந்து செல்ல நவீன வசதிகளுடன் கூடிய 8 புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த ரோந்து வாகனத்தில் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் ஆகியோர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
நள்ளிரவு நேரங்களில் மாநகர பகுதியில் உள்ள போலீஸ் நிலைய எல்கை பகுதி முழுவதையும் கண்காணிப்பது ரோந்து போலீசாரின் பணியாகும்.
நெல்லை மாநகர பகுதியில் உள்ள 8 போலீஸ் நிலையங்களுக்கும் தனித்தனியாக ரோந்து வாகனங்கள் உள்ளன. தற்போது வாங்கப்பட்டுள்ள இந்த ரோந்து வாகனங்கள் விரைவில் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.