தேர்தல் பணியை பார்வையாளர் அஜய் யாதவ் ஆய்வு

ராமநாதபுரம் நகராட்சியில் தேர்தல் பணியை பார்வையாளர் அஜய்யாதவ் ஆய்வு செய்தார்.;

Update: 2022-02-04 19:16 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் நகராட்சியில் தேர்தல் பணியை பார்வையாளர் அஜய்யாதவ் ஆய்வு செய்தார்.

தேர்தல் பார்வையாளர் நியமனம்

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, ராமேசுவரம் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், மண்டபம், சாயல்குடி, கமுதி, அபிராமம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர் ஆகிய 7 பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் ஆர்வமுடன் வேட்பு மனுதாக்கல் செய்தனர். தேர்தலை நேர்மையாகவும், முறையாகவும், முறைகேடுகளின்றியும் நடத்த ஏதுவாக மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இடங்களுக்கு திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வு
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த பார்வையாளர் அஜய் யாதவ் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வார்டு வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலக பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்தார். இதன்பின்னர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் முதலியவை கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையாளர் சந்திரா, தாசில்தார் ரவிச்சந்திரன், துணை தாசில்தார் ஸ்ரீதரன் ஆகியோர் உடன் இருந்

மேலும் செய்திகள்