குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 186 ஆக குறைந்தது

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 186 ஆக குறைந்தது

Update: 2022-02-04 19:06 GMT
நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தநிலையில் 3,716 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 186 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஆண்கள் 83 பேர், பெண்கள் 97 பேர், சிறுவர்கள் 5 பேர், ஒரு சிறுமி என்ற அளவில் பாதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.
186 பேரில் ஒருவர் கேரள மாநிலத்தில் இருந்து வந்தவர். 185 பேரும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் அகஸ்தீஸ்வரம் பகுதியில் 21 பேரும், கிள்ளியூர் பகுதியில் 15 பேரும், குருந்தங்கோடு பகுதியில் 28 பேரும், மேல்புறம் பகுதியில் 3 பேரும், முன்சிறை பகுதியில் 12 பேரும், நாகர்கோவில் நகரில் 37 பேரும், ராஜாக்கமங்கலம் பகுதியில் 14 பேரும், திருவட்டார் பகுதியில் 28 பேரும், தோவாளை பகுதியில் 10 பேரும், தக்கலை பகுதியில் 17 பேரும் அடங்குவர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, கொரோனா சிகிச்சை மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்துதலில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா 3-வது அலையில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரையில் குமரி மாவட்டத்தில் 18,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் இதுவரை 78,936 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்