வாகன சோதனையில் 75 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

இளையான்குடியில் வாகன சோதனையில் 75 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-02-04 19:02 GMT
இளையான்குடி,

இளையான்குடி பெட்ரோல் பங்க் அருகே மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி ரத்தினவேல் தலைமையில் இளையான்குடி பேருராட்சி செயல் அலுவலர் கோபிநாத், தேர்தல் பறக்கும் படை அதிகாரி வேளாண்மை துணை இயக்குனர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் ெகாண்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது பரமக்குடியில் இருந்து காளையார்கோவில் நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த சரக்கு வாகனத்தில் 75 மூடை ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த மருங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜய்(வயது 28) என்பவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சரக்கு வாகனத்தையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து குடிமை பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்