செம்பட்டு,பிப்.5-
துபாயில் இருந்து இன்டிகோ விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் கொண்டுவந்த உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உடைமைகளில் மறைத்து எடுத்து வந்த சுமார் 2½ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.