மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் எலக்ட்ரீசியன் கைது
சீர்காழி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி:
சீர்காழி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.
தீக்குளித்து பெண் தற்கொலை
சீர்காழி அருகே உள்ள புளிச்சகாடு கிராமம் நித்தியவனம் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 29). எலக்ட்ரீசியனான இவருக்கும், வடரங்கம் கீழவாடி கிராமத்தை சேர்ந்த மதிவாணன்- மலர்கொடி தம்பதியின் மகள் ஸ்ரீலதாதேவி (26) என்பவருக்கும் கடந்த 5.2.20-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் அடிக்கடி கணவன்-மனைவி மற்றும் மாமியார், மருமகள் ஆகியோருக்கு இடையே சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி காலை வீட்டில் யாரும் இல்லாத போது ஸ்ரீலதாதேவி உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
எலக்ரீசியன் கைது
இந்த சம்பவம் தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் மனைவியை துன்புறுத்தி வரதட்சணை கேட்டு தற்கொலைக்கு தூண்டியதாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராசை கைது செய்தனர்.