குத்தாலம் பேரூராட்சியில், தேர்தல் பார்வையாளர் விஜயேந்திர பாண்டியன் ஆய்வு

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குத்தாலம் பேரூராட்சியில் தேர்தல் பார்வையாளர் விஜயேந்திர பாண்டியன் ஆய்வு செய்தார்.

Update: 2022-02-04 18:28 GMT
குத்தாலம், பிப்.5-
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குத்தாலம் பேரூராட்சியில் தேர்தல் பார்வையாளர் விஜயேந்திர பாண்டியன் ஆய்வு செய்தார்.
ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளராக விஜயேந்திர பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்புமனு பெறுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ரஞ்சித், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மகேஷ், பரமானந்தம் இளநிலை உதவியாளர் சுந்தர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்