காரில் கொண்டு சென்ற ரூ.9 லட்சம் பறிமுதல்

ஆர்.எஸ்.மங்கலத்தில் காரில் கொண்டு சென்ற ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-02-04 18:22 GMT
ஆர்.எஸ்.மங்கலம்,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வட்ட வழங்கல் அலுவலர் சுவாமிநாதன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு பறக்கும் படை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், காரில் வந்தவர் தேவிபட்டணத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரிமுத்து என்பதும், பத்திரப்பதிவுக்காக ரூ.9 லட்சம் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்ைத பெற்று செல்லுமாறு அவருக்கு அறிவுரை வழங்கினர்.

மேலும் செய்திகள்