புதூர் லூர்து அன்னை ஆலய கொடியேற்றம்
மதுரை கோ.புதூர் லூர்து அன்னை ஆலய கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி 12-ந்தேதி நடக்கிறது.;
மதுரை,
மதுரை கோ.புதூர் லூர்து அன்னை ஆலய கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி 12-ந்தேதி நடக்கிறது.
லூர்து அன்னை ஆலயம்
மதுரை கோ.புதூர் பகுதியில் புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. பங்குத்தந்தை தாஸ் கென்னடி முன்னிலை வகித்தார். திருச்சி சலேசிய மாநில உதவித் தலைவர் அருள்மாறன் தலைமை தாங்கி கொடி ஏற்றி வைத்து விழாவினை தொடக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து "குடும்பம் நம்பிக்கையின் அடித்தளம்" என்ற தலைப்பில் ஜெபமாலை நிகழ்ச்சி. ஆடம்பர திருப்பலி உள்ளிட்டவைகள் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் உதவி பங்குத்தந்தைகள் டேவிட், ஜெரால்டு, பிரபு, நோயல்ராஜ், சலேசியர்கள், அருள்சகோதரிகள், பங்கு அருள்பணி பேரவை, பங்கு இறைமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவை தொடர்ந்து ஒவ்வொரு நாளும், பல்வேறு தலைப்புகளில் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 11-ந்தேதி நற்கருணை பவனி நடக்கிறது.
தேர் பவனி
விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர் பவனி விழா வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்துகொண்டு அன்னையின் தேர் பவனியை தொடங்கி வைக்கிறார். திருச்சி சலேசிய மாநில தலைவர் அகிலன் தலைமை தாங்குகிறார்.
மறுநாள் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.