பிடாரி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது

திருவெண்காடு பிடாரி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2022-02-04 18:18 GMT
திருவெண்காடு:
திருவெண்காடு பிடாரி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பிடாரி அம்மன் கோவிலில் உற்சவம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர உற்சவம் நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கோவிலில் ஹோமம் நடந்தது. பின்னர் பூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதனையடுத்து கோவிலின் கொடிமரத்திற்கு பால், வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
 இதனை தொடர்ந்து வஸ்திரங்கள் சாத்தப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க பட்டாபிராம சிவாச்சாரியார் கொடியை ஏற்றி வைத்து தீபாராதனை செய்தார். இதனைத் தொடர்ந்து பிடாரி அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்