லாரி மோதி 2 பேர் படுகாயம்

ராமநாதபுரத்தில் லாரி மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-02-04 18:02 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சூரங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மனோகரன் மகன் காந்தி (வயது 18). ராமநாதபுரம் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் உடன் படிக்கும் நண்பர்கள் மற்றும் கோட்டைமேடு கோழிக்கூட்டு தெருவை சேர்ந்த ரவி மகன் ராஜபாண்டி (23) ஆகியோர் 3 அதிவேக மோட்டார் சைக்கிளில் 6 பேர் கடந்த 1-ந் தேதி கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து நேற்று முன்தினம் திரும்பி வந்தபோது முதுனாள் விலக்கு ரோடு அருகே அந்த வழியாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் காந்தி மற்றும் ராஜபாண்டி ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக காந்தி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் வண்ணாங்குண்டு குருசாமி மகன் பாஸ்கரன் (26) என்பவரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்