சோளிங்கரில் கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி மோதி 2 மின் கம்பங்கள் சேதம்
சோளிங்கரில் கரும்பு பாரம் ஏற்றிவந்த லாரி மோதி 2 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் நேற்று கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று வந்தது. பாட்டிகுளம் பகுதியில் வந்தபோது திடீரென 2 மின்கம்பங்கள் மீது மோதியது. அதில் ஒன்று இருப்பு கம்பம் என்பதால் வளைந்து விட்டது. மற்றொன்று சிமெண்டு கம்பம் என்பதால் பாதியில் உடைந்து வீட்டின் மீது விழுந்து சேதமடைந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக மின் இணைப்பு துண்டித்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. தொடரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகருக்கு வெளியே பைபாஸ் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் சாலை அமைப்பதற்கு அளவீடு பணிகள் செய்த நிலையில் இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.