கட்டிட தொழிலாளி தற்கொலை

மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-04 17:37 GMT
மதுரை, 
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் பெகேரா (வயது 49). இவர் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கட்டிட பணிக்காக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று நாகேந்திரன்பெகேரா, மருத்துவ கல்லூரி வளாகத்தில் அவர் தங்கியிருந்த இடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்