ரெயில்வே ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

ரெயில்வே ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

Update: 2022-02-04 17:25 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகே உள்ள மணியாரி தெருவை சேர்ந்தவர் முபாரக். இவர் மும்பையில் ரெயில்வே துறையில் பணிபுரிந்து வருகிறார். 

இவரது மனைவி ஷபிமா. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளன. அவர்கள் திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்கள். 

இன்று மாலை ஷபிமா குழந்தைகளை பள்ளிக்கு சென்று அழைத்து வர வீட்டின் கதவில் தாழ்பாள் போட்டு விட்டு சென்றுள்ளார். 

பின்னர் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் மர்ம நபர்களால் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

 அதிர்ஷ்ட வசமாக அதே பீரோவில் மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் தப்பியது. 

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்