கடைசி நாளில் 328 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

நாகை மாவட்டத்தில் கடைசி நாளான நேற்று 328 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 684 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2022-02-04 17:24 GMT
நாகப்பட்டினம்:
 நாகை மாவட்டத்தில் கடைசி நாளான நேற்று 328 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 684 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல்
 நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் கீழ்வேளூர், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, தலைஞாயிறு ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ள 117 வார்டுகளுக்கு நகரப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.
நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தே.மு.தி.க., மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், சுயேக்சைகள் என பலர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
கடைசி நாளில் 328 பேர் மனு தாக்கல்
கடைசி நாளான நேற்று மட்டும் மாவட்டத்தில் நாகை நகராட்சியில் 89 வேட்பாளர்களும், வேதாரண்யம் நகராட்சியில் 82 வேட்பாளர்களும், கீழ்வேளூர் பேரூராட்சியில் 19 வேட்பாளர்களும், வேளாங்கண்ணி பேரூராட்சியில் 47 வேட்பாளர்களும், தலைஞாயிறு பேரூராட்சியில் 36 வேட்பாளர்களும், திட்டச்சேரி பேரூராட்சியில் 55 வேட்பாளர்களும் என மொத்தம் 328 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதுவரை 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் மொத்தம் 684 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

----

மேலும் செய்திகள்