திட்டச்சேரி, தலைஞாயிறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனை
திட்டச்சேரி, தலைஞாயிறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற19-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.வேட்புமனுத்தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், மதுபானங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.திட்டச்சேரி போலீசார் திட்டச்சேரி போலீஸ் நிலையம் அருகில், வாழ்மங்கலம் சோதனைச்சாவடி உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து அனைத்து வாகனங்களும் சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.அதேபோல் திருமருகல் ஒன்றியப் பகுதிகளான திருமருகல், கங்களாஞ்சேரி, அண்ணா மண்டபம், திருக்கண்ணபுரம், சேஷமூலை சோதனைச்சாவடி உள்ளிட்ட இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல தலைஞாயிறு பேரூராட்சியில் பறக்கும் படையினர் தலைஞாயிறு கடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துணை தாசில்தார் துர்காபாய் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.