விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-02-04 17:02 GMT
கரூர்
நொய்யல்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி  கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி வருண கணபதிக்கு  பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள்பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் சேமங்கி, மரவாபாளையம், குறுக்குச்சாலை, அண்ணாநகர், புன்னம், கரைப்பாளையம், தவுட்டுப்பாளையம், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும்  வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவில், காகிதபுரம் வல்லபை கணபதி, புகழிமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர், ஓம் சக்தி நகர் கற்பக விநாயகர் உள்ளிட்ட  விநாயகர் கோவில்களில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்