ஆம்பூர் அருகே 3 அடி நீள நல்ல பாம்பு படிபட்டது
ஆம்பூர் அருகே 3 அடி நீள நல்ல பாம்பு படிபட்டது.
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த குமாரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு படை வீரர்கள் படமெடுத்து ஆடிய 3 அடி நீள நல்ல பாம்பை பிடித்து கோணிப்பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்று அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.