கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் திருவிழா கொடியேற்றம்

கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update:2022-01-21 00:41 IST
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான குழந்தை வேலப்பர் முருகன் கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது மலைப்பகுதியில் நடைபெறும் தேர்பவனி சிறப்பு பெற்றது.
இந்தநிலையில் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அப்போது குழந்தை வேலப்பருக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி இசை வாத்தியங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் பழனி கோவில் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பூம்பாறை பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். 
இதற்கிடையே கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தை வேலப்பர் கோவில் திருவிழா எளிமையாக கொண்டாட‌ முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 28-ந்ேததி தேர்பவனி நடைபெற இருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக பழனி முருகன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்