‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருவில் தேங்கும் கழிவுநீர்
பழனி நகராட்சி 5-வது வார்டு இந்திராநகர் பாரதிதெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் கால்வாயை விட்டு வெளியேறி நடுத்தெருவில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இது சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவதோடு, கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாரிமுத்து, பழனி.
சுகாதாரக்கேடு அபாயம்
தேனி அரண்மனைபுதூரில் வீடுகளுக்கு அருகே கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காத வகையில் முறையான கால்வாய் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்து, தேனி.
சேதம் அடைந்த மின்கம்பம்
திண்டுக்கல் அனுமந்தநகர் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் நடமாடுகின்றனர். எனவே சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும். -அய்யனார், அனுமந்தநகர்.
சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?
திண்டுக்கல் புனிதசேவியர் தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் வீடுகளில் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜோசப், திண்டுக்கல்.