ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட் ஒப்படைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட் ஒப்படைப்பட்டது.

Update: 2022-01-12 15:18 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் 
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் ரத்தானதை தொடர்ந்து ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
தற்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை அ.தி.மு.க. வக்கீல் சிவகாசி ஆனந்தகுமார் ஒப்படைத்தார். கோர்ட்டில் அமைச்சரின் சகோதரி மகன்கள் ஜாமீன் ஆவணங்களையும் பிணையையும் வழங்கினர்.

மேலும் செய்திகள்