பஞ்சாயத்து தலைவர்களுக்கு மதிப்பூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்வு
பஞ்சாயத்து தலைவர்களுக்குமதிப்பூதியம் ரூ 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது
தூத்துக்குடி:
தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியத் தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 பஞ்சாயத்து தலைவர்களும் மாதாந்திர மதிப்பூதிய தொகை ரூ.2 ஆயிரத்தை ஊராட்சி கணக்கு எண்.1-ல் இருந்து அரசாணை வெளியிடப்பட்ட நாளான 15.11.21 முதல் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.