குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் ஜெயிலில் அடைப்பு

தூத்துக்குடியில் பிணை பத்திரத்தை மீறி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்

Update: 2022-01-12 12:41 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்தவர் வினோத் என்ற டேஞ்சர் வினோத் (வயது 40). இவரை தென்பாகம் போலீசார் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவு 107- ன் படி தூத்துக்குடி உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் சார் ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். அங்கு வினோத் என்ற டேஞ்சர் வினோதிடம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 6 மாத காலத்துக்கு குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்து பிணைத் தொகை ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்து பிணை பத்திரம் எழுதி பெறப்பட்டது. இந்த பிணை பத்திரம் பெறப்பட்ட 6 மாத காலம் முடிவடைவதற்குள் வினோத் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பிணை பத்திரத்தை மீறியது தொடர்பாக தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், வினோத் மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் சார் ஆட்சியர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதன்பேரில் வினோத் என்ற டேஞ்சர் வினோத் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் கீழ் 18.2.2022 வரை சிறையில் அடைக்க தூத்துக்குடி உட்கோட்ட நிர்வாக நடுவர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்