ஆடு திருடிய 2 பேர் கைது
ஆறுமுகநேரி அருகே ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். வாரச்சந்தையில் விற்க வந்தபோது அவர்கள் சிக்கினர்.
ஆடு திருட்டு
ஆறுமுகநேரியை அடுத்துள்ள பேயன்விளை பாஸ்நகரை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 62). கூலித் தொழிலாளியான இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். அவர் தனது ஆடுகளை அந்த பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் சுடலைமணி நேற்று ஆறுமுகநேரி வாரச் சந்தைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவருடைய ஆட்டை அங்கு கொண்டு வந்துள்ளனர். உடனே அவர் 2 பேரையும் பிடித்து விசாரித்தார். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
கைது
உடனே சுடலைமணி, 2 பேரையும் பிடித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் ஆறுமுகநேரியை அடுத்துள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (33), ஆறுமுகநேரி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பத்ரலிங்கம் (42) ஆகியோர் என்பதும், ஆட்டை திருடி சந்தையில் விற்க வந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 18 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.