தக்காளியில் ஊசி துளைப்பான் நோயை கட்டுப்படுத்துவது எப்படி

தக்காளியில் ஊசி துளைப்பான் நோயை கட்டுப்படுத்துவது எப்படி

Update: 2022-01-12 11:29 GMT
பொங்கலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் கூறியதாவது:பொங்கலூர் சுற்று வட்டார பகுதிகளில் பயிருட்டுள்ள தக்காளியில் தற்போது ஊசித்துளைப்பான் எனும் புழு வகை பயிரின் இலை, தண்டு, காய் என அனைத்து பகுதிகளையும் தாக்கி சேதத்தை விளைவித்து வருகிறது. இந்த ஊசித்துளைப்பான் புழுக்கள் ஆரம்பத்தில் இலைகளை சுரண்டி சாப்பிடும், பின் இலைகளை மடித்து, உருட்டி அதனுள் தங்கி உண்ணும். அதன்பின் தண்டு பகுதியையும், நன்கு வளர்ந்த புழுக்கள் ஊசி போன்ற துளை ஏற்படுத்தி பழங்களை உண்ணும். தற்போது நிலவி வரும் காலநிலை இந்த புழுக்கள் மிக வேகமாக பெருக காரணமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த
10 லிட்டர் தண்ணீரில் அசாடிராக்டின் 1 சதம்வீதம் 20 மில்லி அல்லது குளோரண்ட்ரனிலிப்ரோல் 18.5 சதவீதம் 3 மில்லி அல்லது புளுபெண்டமைடு 20 சதவீதம் டபிள்யூ.ஜி 3 மில்லி அல்லது இண்டாக்சோகார்ப் 14.5 சதம்வீதம் 5 மில்லி கலந்து தெளிக்கவும். பூச்சி தாக்கிய பழங்கள், செடிகளை அகற்றி ஆழக்குழியில் புதைக்கவும். பயிர் சுழற்சியில் கத்தரி, மிளகாய் பயிரிடுவதை தவிர்க்கவும். பூச்சி தாக்காத நாற்றுகளை நடவும். ஏக்கருக்கு 16 இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளைக்கவர்ந்து அழிக்கவும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்