தேங்காய் பருப்பு ஏலம்

தேங்காய் பருப்பு ஏலம்

Update: 2022-01-12 10:36 GMT
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று முன் தினம் 250 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 8 ஆயிரத்து 501 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 14 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 91.80க்கும், குறைந்தபட்சம் ரூ. 62க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.86லட்சத்து 84ஆயிரத்து 442க்கு வணிகம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்