மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது

ஆய்க்குடி பகுதியில் மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-11 22:48 GMT
அச்சன்புதூர்:
ஆய்க்குடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிளாங்காடு கருப்பாநதி ஆற்றுப்பாலம் அருகில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, முட்புதருக்குள் விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்த மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 42) என்பவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்