பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டம்

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-11 22:12 GMT
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 150-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ஊக்கத்தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பயிற்சி டாக்டர்களின் தேவை அதிகமாக உள்ளது. இந்தநிலையில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்கும் பயிற்சி டாக்டர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்த தொகையை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பயிற்சி டாக்டர்கள், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு நேற்று இரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு தங்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

மேலும் செய்திகள்